திங்கள், 31 ஆகஸ்ட், 2015

வலைபதிவர் twenty fifteen



    வணக்கத்திற்குரிய பெரியவர்களே, பாசத்திற்குரிய நண்பர்களே!!  விழாவிற்கு முதல் நாளே வருவதாய்   கூறியுள்ள  பதிவர்களே!! லேட்டா பதிவுசெஞ்சாலும் லேடஸ்டாதான் பதிவு பண்ணுவோம்னு கூறிக்கொண்டிருக்கும் என்னை போன்றோர்களே அனைவருக்கும் வணக்கம...
                         
                  இங்கே வேலை மிகவும் சிறப்பாக பெரியோர்களின் துணையோடு செய்துகொண்டிருக்கிறோம். உங்கள் ஒவ்வொருவரையும் காண மிகவும் ஆவலாக உள்ளோம்... இதுவரை வருகையை பதிவு செய்தவர்கள் பட்டியலில்  முதலிடத்தில் சென்னை பதிவர்களும் , இரண்டாமிடத்தில் மதுரை பதிவர்களும், முன்றாமிடத்தை   தஞ்சை மற்றும் புதுகை பதிவர்களும் உள்ளனர். உடனே  பதிவு செஞ்சு உங்க ஊற முன்னிலைக்கு கொண்டுவாங்கனு கேட்டுகிடுதேன். பதிவுபண்ண இந்த பாருங்க வலது பக்க மூலைல  ஒரு படம் இருக்கு அதை கிளிக் பண்ணுங்க.. இது வர நிறைய பேர் நன்கொடை குடுத்துருக்காங்க... அவங்களுக்கு விழாக்குழு சார்பா நன்றிகள்... உங்களுக்கு வலைபதிவர் திருவிழா பத்தி  ஏதும் தகவல் வேனும்னாக்க  bloggersmeet2015@gmail.com கிற மின்னஞ்சல் மூலமா தகவல் தெரிஞ்சுக்கலாம்... இத விடவும் தகவல் தெரிஞ்சுக்க இருக்கவே இருக்கு திண்டுக்கல் தனபாலன் அய்யாவோட வலைப்பூ... உங்களை எதிர்பார்த்து காத்திருக்கோம் உடனே பதிவு பண்ணுங்க... திருவிழாவுல சிந்திப்போம்... கலக்குவோம் 

நன்றி... ஸ்ரீ 
                

சனி, 29 ஆகஸ்ட், 2015

வெகுதொலைவில் இல்லை - கவிதை

உனையின்றி உண்டதில்லை உணவு குழவியில்
உனையின்றி புனைந்ததில்லை கவிதை காதலுக்காய்
உனையின்றி ஆகவில்லை கவிஞர் கிறுக்கனுட்பட
உன்னுள் சிறு கலக்கம் காண்கிறேன்
என்னிலும் அக்கலக்கம் தொற்றிகொண்டது
அடியேன் காரணம் கண்டறியேன்!

என்னுள் நானே சிந்தித்துக் கொண்டேன்
என்னுள் ஊடுருவிப் பாய்ந்ததோர் ஒளிவெளிச்சம்
தென்றலாய் வருடியதது மின்னலாய் வெட்டியது
இடியாய் முழங்கியதது மழையாய் பொழிந்தது
சிட்டாய் சிறகடித்தது வினாக்கள்
இதோ இதுவாய் இருக்குமோ ?

வண்டு நுழைந்த செவிகள் போல் -
உங்கள் மனத்தடத்தின் ஒலிகளும் எஞ்செவிகளில்
அதோ அதுவாய்த்தான் இருக்குமோ ?
இருக்கலாம் என்றே சிந்தை சொல்கிறது
சிந்தை சிந்தித்ததை சிந்துகிறேன் சிதறாமல்
சின்னவனின் சிந்தனையில் சிந்தியதிதுதான் !!!

மனிதருள் அன்பு குறைத்ததுதான்
கலக்கத்தின்  காரணமோ? - வெண்ணிலவே
உன்னுள் அக்கலக்கம் என்றுதான் மறையும்
உறுதியாய்ச் சொன்னால் அது ...........................
(தலைப்பை படிக்கவும் )

புதன், 26 ஆகஸ்ட், 2015

ஆர். எம்.எஸ்.ஏ முதல் பயிற்சி அனுபவம் பகுதி 2

              மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி... பயிற்சி முடித்து நானும் திரு. கஸ்தூரி ரெங்கன் அய்யாவும் வண்டியில் புதுக்கோட்டைவந்துகொண்டிருக்கும் போது ஒரு தேநீர் கடை வழிமறித்தது. உள்ளே போய் அமர்ந்து தேநீர் அருந்தினோம். விதைக்கலாம் என்ற அமைப்பை உருவாக்கி இருப்பதால் அங்கே மரங்கள் நடலாமா  என்ற சந்தேகத்துடன் நான் கேட்டபொழுது அதன் உரிமையாளர் உடனே வைத்துக்கொள்ளுங்கள் என்றார். ( விதைக்கலாமை பற்றி ஒரு விரிவான பதிவை அடுத்ததாக எழுத இருக்கிறேன் ). 

     இரண்டாம் நாள் பயிற்சிக்கு காலை சென்றதும் திரு.க.ரெ அய்யா ஒவ்வொருவரையும் அறிமுகபடுத்திக்கொள்ளும்  நிகழ்வினை ஏற்பாடு செய்தார். நான் அதற்குள்ளாக அங்கே இருந்த ௧௨ வகுப்பு  மாணவர்களை பிடித்தது பெருந்திரை காட்சி வீழ்தியை தயார்  செய்தேன். செல்வர்கள். முகமது ஆசிப், மனோகர், பெருமாள் போன்றோர்  அதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர். அடுத்ததாக திரு பிரபாகரன் அய்யாவும் தன்னுடைய பாடவேலையை அருமையாக முடித்தார். நான் என்னுடைய பங்கிற்கு செயல்பாட்டு வடிவில் பாடப்பகுதியை தயார்செய்து நடத்தினேன். இரண்டாம் நாள் இந்தளவில் இனிதே நிறைவுபெற்றது. 
   
             மூன்றாம் நாளில் முதல்  இரண்டு வேளைகளில் பெருவீழ்த்தியில் ஒவ்வொரு வினாவிற்குரிய கோப்புகாட்சிகள் காண்பிக்கப்பட்டு கருத்துகள்  பரிமாறப்பட்டன. ஒரு சுவையான சம்பவத்தை இந்த இடத்தில எழுத விரும்புகிறேன் இதற்கும் இந்த கட்டுரைக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை ஆனால் என்னை மிகவும் ஆச்சர்யபடுதிய செய்தி அது. ஒரு ஆசிரியை  தன்னுடைய மகளை  அங்கே கூட்டிவந்திருந்தார். அவள் முந்தயவருடம் படித்த பள்ளியில் அவளுக்குபிடித்த ஒரு ஆசிரியர் இருந்திருக்கிறார்கள் . அவர்கள் தற்போது வேறு பள்ளிக்கு மாறிவிட்டார்களாம். அந்த ஆசிரியை இல்லாத பள்ளியில் நானும் இருக்க மாட்டேன் என்று மாற்று சான்றிதழ் வாங்கிக்கொண்டு இப்பொழுது  வேறுபள்ளியில் படிக்கிறாள் இந்த  குழந்தை. மெய்சிலிர்த்துப்போனேன்.


          இவ்வாறாக மூன்றாம் நாளில் இன்னும் சில அனுபவங்களுன் பயிற்சி பள்ளி தலைமைஆசிரியை அவர்களின் வாழ்த்துக்களோடு நிறைவுபெற்றது .. நன்றி 

வியாழன், 20 ஆகஸ்ட், 2015

ஆர்.எம்.எஸ்.ஏ முதல் பயிற்சி அனுபவம் பகுதி - 1

வணக்கம் தோழர்களே!
               புதிய பதிவோடு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நான்  ஆசிரியன் என்பதை நம்புவது என்பதே என்னை பார்க்கும் பலருக்கும் சவாலானதாகும். அதிலும் இந்த கத்துக்குட்டி அவர்கள் முன்னிலையில் பயிற்சியளிப்பதென்பது  சவாலினும் சவாலானதே!  இப்படியாய் என்னுடைய அனுமதியோடு என்னை இதில் கோர்த்துவிட்ட பெருமை ஒருவரையே சாரும். அவரைப்பற்றியே ஒரு பதிவை  எழுதலாம் என்றிருக்கிறேன். ஆகவே அவரது பெயர் இப்பொழுது வேண்டாம்.
          முதல் நாள் ஒருவிதமான பதற்றத்துடனும் அதே சமயம் இந்த வாய்ப்பை நிச்சயம் நழுவவிடக்கூடாது என்ற உறுதியுடனும் திருமயம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பேருந்தில் பயணத்தை துவங்கினேன் .(முதல் நாள் பயிற்சிக்கான  முன்தயாரிப்பு இருக்கிறதே அது பெரிய கதை  ). பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும் பள்ளிக்கு சென்ற மாணவனை பார்த்து இங்கு ஆண்கள் பள்ளி எங்கு இருக்கிறது என்று கேட்டவுடன் அப்படியே பின்னாடியே வாங்க என்றான் நடந்துகொண்டே? கையில் பை கனமாக இருக்க அப்பா தம்பி மெதுவா நட என்றால் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் போய்கொண்டே இருந்தான்... ஒருவழியாக பள்ளியின் பின்புற வாயிலுக்கு கொண்டுவந்து  இப்படியே போங்க என்றான்... முதல் நாளே பின்புறமாக போவதா என்ற தயக்கத்துடன் உள்ளே சென்றேன்...

        உள்ளே சென்றவுடன் அங்கே இருந்த ஒரு அலுவலரிடம் வந்த செய்தியை கூற அவரோ ஒரு செய்தித்தாளை கொடுத்து இந்தாங்க அம்மா வரவரைக்கும் இத படிங்க என்று ஒரு அறையில் உட்கார வைத்தார்.  படித்து முடித்தேன், இல்லை படம் பார்த்தேன் என்பதே உண்மை. இதற்குள்ளாக ஒவ்வொருவராக  மற்ற பள்ளிகளிலிருந்து பயிற்சிக்கு வரத்தொடங்கினர். நிறைய தெரிந்த பழகிய முகங்கள் என்பதால் ஒருவித மகிழ்ச்சி, இருப்பினும் அவர்களில் சிலரிடம் விடைத்தாள் திருத்தும் மையத்தில் விடைத்தாள் திருத்துபவராக  பணியாற்றி இருக்கிறேன். அந்த நடுக்கமும் கூடவே இருந்தது. ஒரே நம்பிக்கை என்னவெனில் அங்கே தலைமைபயிற்சியளராக  பி. அழகாபுரி பட்டதாரி ஆசிரியர் பிரபாகரன் அய்யா வந்திருந்ததே. என்ன நடந்தாலும் அவர் பார்த்துக்கொள்வர் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்.

      பயிற்சி ஒரு சிறிய மனக்கசப்புடனேயே துவங்கியது.(அதை சொல்ல விரும்பவில்லை). முக்கியமான ஒன்றை சொல்லவில்லை, பயிற்சி ஆங்கில ஆசிரியர்களுக்கானது. ஆங்கில பாடத்தில் மாணவர்களின் முன்னேற்றத்தை அதிகபடுத்த கொடுக்கவேண்டிய பயிற்சி. எனவே முதல் இரண்டு பாடவேளைகளும் திரு. பிரபாகரன் அய்யா அவர்கள் பயிற்சியளித்தார்கள். அவர் பயிற்சி கொடுக்க கொடுக்க ஒரு பாஸ்ட் அண்ட் பியுரியசே வயிற்ருக்குள் ஓடியது எனலாம். என்னம்மா நடத்துராருபா!!! இது நடந்துகொண்டிருக்கும்போதே  மதியத்திற்கு கஸ்துரி ரெங்கன் அய்யா அவர்கள்  பயிற்சியளிக்க வருவதாய் அலைபேசியில் சொல்ல இரண்டு ஹாலிவூட் படங்கள் வயிற்ருக்குள் ஓடியது.  இதில் இன்னொரு தர்மசங்கடம் நான் எதை  முன்தயாரிப்பு செய்துவைதிருந்தேனோ அதில் பாதியை பிரபாகரன் அய்யா அவர்கள் முடித்துவிட்டார்கள். பேர் கிரில்ஸ் சொல்வது போல இனி நான் நினைத்தது ஒன்றும் நடக்க போவதில்லை என்றே நினைத்துக்கொண்டேன்.

     மதிய உணவு இடைவேளை முடிந்ததும் என்னுடைய முறையும் வந்தது. என்னுடைய தாய் தந்தைக்கும்,( என்னுடைய தமிழ் அய்யா திரு. அந்தோனிசாமி அவர்கள் நான் ஆறாம் வகுப்பு படிக்கையில் பேச்சு போட்டியில்  முதல் வணக்கம் எப்படி சொல்வது என்று சொல்லிகொடுத்தார் அதிலிருந்தே இப்படித்தான் என்னுடைய உரையை தூக்குவது வழக்கம் ) பிறகு என்னுடைய ஆசிரியர் மற்றும்  நண்பர்களுக்கும் வணக்கம் கூறி மீதமிருந்த வினாக்களை ஒவ்வொன்றாய் நடத்த ஆரம்பித்தேன். நான் ஒவ்வொன்றாக நடத்தும் போதும் அங்கே இருந்தவர்கள் என்னை ஊக்கப்படுதினர். என்னுடைய நடுக்கமும் பயமும் மறைந்து என்னுடைய முழு தயாரிப்பையும் அவர்களிடம் கொண்டு சேர்த்தேன். அடுத்ததாக என்னுடைய தோழி செல்வி. ரம்யபாரதி அவர்கள் மிக சிறப்பாக வகுப்பெடுத்தார்கள். அடுத்ததாக திரு. கஸ்துரி ரெங்கன் அய்யா அவர்கள்  அவருடைய பாணியில் மிகவும் சிறப்பாக வகுப்பை முடித்தார்கள். அன்றைய நாள் மிகவும் இனிதே நிறைவு பெற்றது. 

( அடுத்த பகுதியில் கஸ்துரி ரெங்கன் அய்யா அவர்களும் நானும் ஒரு டீ கடையில் பெற்ற அனுபவத்துடன் மற்றவை எழுதுகிறேன்)

     

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

வலைப்பதிவர் திருவிழாங்கோ!!!ப

வணக்கம் வலைப்பதிவர்களே!!!
        நம்முடைய புதுக்கோட்டையில் வலைப்பதிவர் திருவிழா... அப்படி என்ன திருவிழாபா இதுன்னு கேட்குறிங்களா... சொல்றேன் நல்லா  கேட்டுக்கோங்க... உங்க திறமைய வெளிக்கொண்டுவர திருவிழா...உங்க செவிக்கு தீனிபோடற திருவிழா... உங்க அறிவுபசிய போக்கிவைக்கபோற திருவிழா...அதுமட்டும் இல்லைங்க கண்ணுக்கும் விருந்தளிக்கிற திருவிழா...இது எல்லாத்தையும் விட விருது தராங்கப்பா விருது!!!  புதுபதிவர்கள் விருது வாங்கணும்னு நினசின்ங்கனா என்ன பண்ணனும் தெரியுமா?
அதுக்கு உங்களுக்கு ஒரு பிளாகும் கொஞ்சம் அப்டேடும் வேணும் அவ்ளோதாங்க....  நீங்க எத பத்தி வேணாலும் எழுதியிருக்கலாம்... இங்க எதுக்கெல்லாம் விருதுனா
                                           1)   வளர்தமிழ்ப் பதிவர் விருது
(தமிழ்மொழி வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களித்து வரும் பதிவர்)(2)   மின்னிலக்கியப் பதிவர் விருது” 
(கதை,கவிதைப் படைப்புகளைச் சிறப்பாக எழுதிவரும் பதிவர்)

(3)   வலைநுட்பப் பதிவர் விருது” 
வலைப்பக்கம் எழுத உதவியாகத்
தொழில்நுட்ப விளக்கங்கள் எழுதிவரும் பதிவர்)

(4)   விழிப்புணர்வுப் பதிவர் விருது” 
(சமூக விழிப்புணர்வுப் பதிவுகளைச் சிறப்பாக எழுதிவரும் பதிவர்)

(5)   பல்சுவைப் பதிவர் விருது” 
                                  (திரைப்படம்ஊடகம் செய்திகளைச் சுவைபட எழுதும் பதிவர்)

இப்படி பல விருது தராங்க... சரி நா விஷயத்துக்கு  வரேன்...  இப்போ என்னோட பிலாகோடா வலது புற ஓரத்துல வலைப்பதிவர் திருவிழா லோகோ இருக்குள்ள அதுல  கிளிக் செஞ்சு அதுல உங்க விவரத பதிவு செய்ங்க... . இந்த விருதுகள நாங்க உங்களுக்கு குடுக்க முத்துநிலவன் அய்யா அப்பறம் பொன்.க அய்யாவோட நாங்க எல்லாரும்  ரொம்ப ஆவலா காத்திருக்கோம்...   இந்த திருவிழாவிற்கு நிதிகுடுக்க ஆசையா இருந்தா இந்தாங்க டீடியலு...

First Name        : MUTHU BASKARAN
Last Name         : N
Display Name      : MUTHU BASKARAN N
Bank              : STATE BANK OF INDIA
Branch            : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number    : 35154810782
Branch Code       : 16320
IFSC Code         : SBIN0016320
CIF No.           : 80731458645


கலந்து பேச இந்தாங்க ஜி மெயிலு  bloggersmeet2015@gmail.com

வருக வருக என அனைவரையும் வரவேற்கிறோம்...

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

முடிந்தது

காலையில் திரு. கஸ்தூரி ரெங்கன் அய்யா   அவர்களின் ஒரு கவிதையினை ''வலியுணர் இதயங்கள் வடிக்கும் கண்ணீர்
கவிதை? என்பதனை கருவாக கொண்டு எழுதிய கவிதை. காதலன் காதலியின் திருமணத்திற்கு செல்வது போன்ற சூழலை மையபடுதிக்கொண்டேன். 


                                                          முடிந்தது !!!
அமைதியான அந்திப்பொழுது கதிரவன் ஒளிபரப்பி 
அழகை மறையும் நேரம்,
மனம் மட்டும் அலைபாய்ந்தது 
மொட்டுக்கள் விரியத் துவங்கின 
ஏன் இதயமோ சுருங்கத் துவங்கியது
இருட்டத் துவங்கியது, உடம்போ 
நடுங்கத் துவங்கியது !

என்செய்வது மானிடப் பிறப்பில் நானும்
ஒரு மடையன் என்று நினைத்துக்கொண்டேன்,
கரணம் சொல்லமுடியவில்லை
சொல்லாமலிருக்கவும் முடியவில்லை மறுநாள் 
நடக்கவிருக்கும் நிகழ்வு மனக்கண்ணில் 
ஒளிபிழம்பாய் சிதறியது!

பொழுது புலர்ந்தது புலரும் முன் எழுந்தேன்
உறங்கினால்தானே எழுவதற்கு!
புத்தாடை உடுத்தினேன் புறப்பட்டேன் சாதிக்க 
பேருந்தில் ஏறி அமர்ந்தேன்,
நடத்துனர் கேட்ட சில்லறையை அள்ளிக்கொடுத்தேன்.
புறப்பட்டது, மனதில் புத்துணர்ச்சி - நின்றது 
கிழே இறங்கினேன், ஓடினேன் வேகமெடுத்து ,
போனேன் அங்கே, வெற்றி பெற்றேன்!!!

குண்டு வெடித்தது போல் ஒரு சத்தம்,
தலையில் மோதிக்கொண்டேன் !
உண்மை புரிந்தது, வெற்றி என் கனவில்!
பேருந்தின் ஒரு சக்கரம் பழுதானது,
உச்சந்தலை சுட்டது:நெற்றியில் வியர்வை
கொப்பளித்தது - கண்கள் இருட்டின,
இமைகள் சுருண்டது: மூச்சு விடவில்லை ,
உதடுகள் மௌனம் சாதித்தது - செவிகள் 
கேட்க்க மறுத்தது, இதயம் படபடத்தது,
கை கால்கள் செயழிழந்தது!!!

உள்ளுக்குள் புழுங்கினேன், இனி ஒன்றும் 
நான் நினைத்தது நடக்கபோவதில்லை.
உண்மை தெரிந்தது, உலகம் புரிந்தது:
காரணம் நான் மறைத்தது மட்டுமே.
என்னவளின் திருமணம் இன்றுதான்,
அத்தனையும் நிழல் என்றுணர்ந்தேன்,
அவள் பின்பம் மட்டும் மனக்கண்ணில் ஓடியது!
சோக பாடல்களை வாய் முணுமுணுத்தது,
தத்துவங்கள் எழுத காகிதம் தேடினேன்.

வேறென்ன செய்வது, செய்வதற்கு ஒன்றுமில்லை,
தொலைத்துவிட்டேன் அவளை - சொல்லியிருக்கலாம் 
என் காதலை, இன்னும் சொல்லவில்லை அவளிடம்.
சொல்ல நேரம் வந்தபோதும் அவள் கல்விதான் 
என் கையை பிடித்து நிறுத்தியது.
சொல்லி அவள் வெறுத்திருந்தால், அப்போதே தோற்றிருப்பேன்.
சொல்ல வேண்டாம்! சொல்ல வேண்டாம்!

என் மனக்குரல் என்னிடம் குமுறியது
தேற்றினேன் என் மனதை - எப்படி 
எனக்கே தெரியவில்லை.
போனது போகட்டும், இனியும் வேண்டாம்!
உயிர் பிரியும் வரை அவளுக்கிடம் என் மனதில்.
என் காதல்...............................
தலைப்பில் உள்ளது பதில் !!!!!


                                                                                          நட்புடன் ஸ்ரீ....

வியாழன், 13 ஆகஸ்ட், 2015

செம்மொழியின் தொன்மைகள்

கற்கண்டாம் நற்கனியாம் முப்பாலும்
எடுத்துரைத்த முதுமொழியாம் - அதுவே
நம் செம்மொழியாம்

மூத்தோரை பணிந்து  வேண்டி
 எல்லோரும் இன்புற்று வாழும்
அழியாப் புகழ்மொழியாம் - அதுவே
நம் செம்மொழியாம்

 அழகான உடை உடுத்தி நவரத்தின மாலை சூடி
மாசில்லா நாகரிகம் உருவாக்கிய
மங்காத நல்மொழியாம் - அதுவே
நம் செம்மொழியாம்

வாயார வரவேற்று, வயிறார உணவு ஈண்டு
வற்றாத புகழ் கொண்டு வந்தாரை வாழவைக்கும்
வாடாத மென்மொழியம் - அதுவே
நம் செம்மொழியாம்

பன்னூறு புலவர்களும் பார்போற்றும் அறிஞர்களும்
பாரினிலே தோன்ற செய்த
பழமையான தமிழ்மொழியாம்- அதுவே
நம் செம்மொழியாம்





புதன், 12 ஆகஸ்ட், 2015

ஜூனியர் ரெட் கிராஸ் என்னும் அமைதிப்படை


       இன்றைய நிகழ்வு மிகவும் விசித்ரமாகவும் அதே நேரம் சுவாரஸ்யமாகவும் அமைந்த நிகழ்வு. ஒரு மாணவனிடம் நாம் என்னென்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை மற்ற நாட்களை போலவே இன்றும் நன்றாகவே உணர்தேன். இன்று அருள்மிகு பிரகதம்பாள் மேல்நிலை பள்ளியில்  ஜெனீவா ஒப்பந்த நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. ஆரம்பம் முதலே மாணவர்கள் ஆர்வமுடன் அனைத்து நிகழ்வுகளிலும் பங்குபெற்றனர்.
     ஒவ்வொருவராக கருத்தரங்க தலைப்பை பற்றி பேசி முடித்தனர். இறுதியாக இ்ரண்டு மாணவர்களை ஏற்புரை வழுங்குமாறு அழைத்ததும் சட்டேன்று ஒரு மாணவி எழுந்து "
 இனி எங்கும் குப்பை கிடந்தால் அதை எடுப்பேன், அய்யா அப்துல் கலாம் போல் பெரிய வின்ஞானியாவேன் ், இனி ஒருபோதும் எங்கும் சண்டைகள் நடக்க விட மாட்டேன்" என்று கூறி அமர்ந்தாள். அந்த சிறுமி மேடை விட்டு கீழே இறங்கும் போது அவளிடம் இந்த கருத்தரங்கு அவளை எந்தளவு கவர்ந்திருக்கிறது என்பதும், அவளிடம் ஏற்பட்டிருந்த உத்வேகமும் அவள் முகத்தில் தெரிந்தது.
நிச்சயம் இவளை போன்றவர்கள் சாதிப்பர்: ஒரு அமைதிப்படை உருவாகும் என்பதில்  எள்ளளவும் சந்தேகம் இல்லை.!!! நட்புடன் ஸ்ரீ

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

தீப்பெட்டியில் இருக்கும் தீக்குச்சிக்கு தெரிவதில்லை தன்னால் பலருக்கு வெப்பமும், வெளிச்சமும் தரமுடியும் என்று...

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...